சென்னை to திருச்சி விமானத்தில் கதவை திறந்தது யார்? - வாட்ச் பற்றி செந்தில் பாலாஜி போட்ட டுவிட்

சென்னை to திருச்சி விமானத்தில் கதவை திறந்தது யார்? - வாட்ச் பற்றி செந்தில் பாலாஜி போட்ட டுவிட்
x


சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி செல்லவிருந்த விமானத்தின், அவசரகால கதவை பயணி ஒருவர் திறந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

கடந்த மாதம் 10-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் தற்போது தான் தெரிய வந்துள்ளது.

அன்றைய தினம், திருச்சிக்கு செல்வதற்காக விமானம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, விமானத்தில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்த போது பயணி ஒருவர் தவறுதலாக வலதுபுறமிருந்த அவசரகால கதவை திறந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு பின்னர் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைக்கு விமான போக்குவரத்து ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி, சென்னையிலிருந்து திருவனந்தபுரம் சென்ற இன்டிகோ விமானத்தின் ஜன்னல் கதவை பயணி ஒருவர் திறந்ததாக எழுந்த புகாரை விசாரிக்க விமானத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டு ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று கேள்வியெழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்று என கூறியவர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்ததாக கூறாமல் இருந்தால் சரி என பதிவிட்டுள்ளார்.


சட்டப்பேரவையை கலைத்து விட்டு, மீண்டும் தேர்தல் நடத்துவதன் மூலம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்? என, முரசொலி நாளிதழில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

இது தொடர்பான இன்றைய முரசொலி நாளிதழ் தலையங்க கட்டுரையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என, மத்திய பாஜக அரசு கூறி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில், சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில், அந்த அரசை கலைக்க போகிறார்களா?, அவ்வாறு கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்துவதன் மூலம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதால் கூட தனியாக செலவாகிறது என்பதால், அதையும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலுடன் நடத்த வேண்டியதுதானே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை என்றால், ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து ஆட்சியை கலைக்கும் நிலையில், அப்படி கவிழ்க்கப்பட்ட ஆட்சிக்கு எப்போது தேர்தல் நடத்துவீர்கள்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு தூதர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். கடற்கரை கோயிலுக்கு வந்த அவரை மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து ஐந்துரதம், அா்ச்சுணன் தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சின்னங்களை பார்த்து ரசித்தார். மேலும், தன்னுடைய பாதுகாப்பிற்க சுற்றுலா பயணிகளை, தடுத்து நிறுத்த வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுத்திய தூதர், பெருந்தன்மையோடு மக்களோடு, மக்களாக சுற்றிப்பார்த்தார்.


Next Story

மேலும் செய்திகள்