தி.நகர் பத்மாவதி கோயில் கும்பாபிஷேகம்.. பால் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்
தி.நகர் பத்மாவதி கோயில் கும்பாபிஷேகம்.. பால் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்
- கும்பாபிஷேகம் நடைபெற உள்ள சென்னை தியாகராயநகர் பத்மாவதி தாயார் கோயிலில், சிலைகள் மற்றும் கோபுர கலசங்களுக்கு பால் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
- சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பத்மாவதி தாயார் கோயிலில் வருகிற 17ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- கடந்த 2021 பிப்ரவரி 13-ம் தேதி பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், சுமார் 10 கோடி செலவில், கோயில் கட்டப்பட்டுள்ளது.
- இந்நிலையில், கோபுர கலசங்கள் மற்றும் சிலைகள் ஒரு தொட்டியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றிற்கு வழிபாடு செய்யப்பட்டன.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சிலைகள் வைக்கப்பட்டிருந்த தொட்டியில் பாலை ஊற்றி, வழிபட்டனர்.
Next Story