சென்னை மக்களை குதூகலமாக்கிய விஷயம்"காலேஜ் டைம்ல இங்க தான் வருவோம்.. திரும்ப இதே மாதிரி வந்தது ரொம்ப ஹேப்பி"

x

சென்னை செனாய் நகரில் 18 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட திரு.வி.க பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னையில் உள்ள மிகப்பழமையான பூங்காக்களில் ஒன்றான ஷெனாய் நகர் திரு.வி.க பூங்கா, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளுக்காக காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு மூடப்பட்டது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக இந்த பூங்காவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், இந்த பூங்காவை மேம்படுத்தும் பணிகள் கடந்த 2018 ஆண்டு தொடங்கியது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதி உதவியுடன் 18 கோடி ரூபாய் மதிப்பில், புதுப்பொலிவுடன் பொழுதுபோக்கு பூங்காவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், திரு.வி.க பூங்காவை பார்வையிட்டார். இந்த பூங்காவில் திறந்தவெளி திரையரங்கு, செயற்கை நீரூற்று, யோகா மற்றும் தியான கூடங்கள், கூடைப்பந்து, பூப்பந்து மைதானங்களும் அமைந்துள்ளன. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருவிக பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது சென்னை வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்