"அட ஆமாங்க.. நான் எஸ்.ஐ.தான் பேசுறேன்".. உடனே பணத்தை கட்டுங்க.. போலீஸ் வர்றாங்க - வித்தியாசமான முறையில் பண மோசடி
- நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்றவரிடம் போலீஸ் என கூறி பண மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
- சென்னை நம்மாழ்வார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் கடந்த 2019ல் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
- 33 மாதங்களுக்கு கடனை செலுத்துவதாக ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில், 24 மாதங்கள் மட்டுமே பணத்தை செலுத்தியுள்ளார்.
- இதனிடையே வட்டியோடு சேர்த்து 23 ஆயிரம் ரூபாய் பணம் நிலுவையில் உள்ளதாக ஆகாஷூக்கு போன் வந்துள்ளது. வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து எஸ்.ஐ. பேசுவதாகவும், நிதி நிறுவனத்துக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டாததால் போலீஸ் தேடி வருவதாக கூறியிருக்கிறார்
- . இதனால் பயந்து போன ஆகாஷ், அவர் சொன்ன எண்ணில் 23 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் கட்டியிருக்கிறார்.
- பின்னர் மீண்டும் பணம் கட்ட வேண்டும் என அந்த நபர் கூறவே சந்தேகத்தின் பேரில் காவல் ஆணையர் அலுவலகம் சென்ற போது ராஜேந்திரன் என்ற எஸ்ஐ இல்லை என உறுதியானது.
- இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆகாஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story