ஹவுஸ் ஓனரின் மருமகன் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாமியாரை கொன்ற பெண்.. சென்னையில் பகீர் சம்பவம்
தரமணியை சேர்ந்த சாந்தகுமாரி என்பவர், வீட்டில் தனியாக இருந்தபோது, முகத்தில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த மூன்றரை லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த மூதாட்டியின் வீட்டில், வாடகைக்கு குடியிருந்த ஸ்ரீஜா மற்றும் அவரது சகோதரர் விஜய்பாபு ஆகியோர், பணத்திற்காக இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த சாந்தகுமாரியின் மருமகன், ஸ்ரீஜாவை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் என்றும், பணம் தருவதாகக் கூறி சாந்தகுமாரி ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. ஆத்திரமடைந்த ஸ்ரீஜாவும், அவரது தம்பி விஜய்பாபுவும், பீரோவில் இருந்து மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை திருடியபோது, சாந்தகுமாரி விழித்துக் கொள்ளவே, அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.