தட்டிக்கேட்ட வார்டன் மார்பில் கத்தியை இறக்கிய வடமாநில இளைஞர் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
- சென்னையில் மதுபோதையில் அதிக இசை சத்தத்துடன் ஹோலி கொண்டாடிய வடமாநில இளைஞர், தன்னை தட்டிக்கேட்ட தங்கும் விடுதி பொறுப்பாளரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தங்கம் விடுதியில் வேலைபார்த்த சோனு என்ற இளைஞர் மது போதையில் அதிக சத்தத்துடன் ஹோலி கொண்டாடியுள்ளார்.
- அதிக இசை சத்தத்தால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதால், சோனுவை விடுதி பொறுப்பாளர் கதிர்வேல் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
- இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்துள்ளது.
- சண்டையில் காய்கறி வெட்டும் கத்திய எடுத்த சோனு, கதிர்வேலின் மார்பு பகுதியில் குத்தியதுடன், தனது கையையும் அறுத்துள்ளார்.
Next Story