'சென்னை ரன்னர்ஸ்' மாரத்தான்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் | Marathon | Chennai
சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 21 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்று ஓடினர். மேலும், மாற்றுத்திறனாளிகள் உள்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் ஓடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாரத்தான் முன்பதிவு தொகையை நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் இன்சுலின் மருத்துவ உதவிக்கு பயன்படுத்தப்படும் என்றார்
Next Story
