MLA மனைவி வார்டில் தரமற்ற சாலை.. தரமில்லாத தார்க்கலவையா? - ஆய்வில் வெளிவந்த உண்மை!

x
  • சென்னை வளசரவாக்கத்தில் சாலை அமைக்கும் பணிகள் தரமாக இல்லாததால், திரும்பப் போட ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டு, பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
  • சென்னை மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை கண்காணிக்க ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • வளசரவாக்கம் மாருதி நகர், முதல் பிரதான சாலையில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றபோது, அங்கு வந்த ஆய்வுக் குழுவினர், பரிசோதனை செய்தனர்.
  • சாலையில் கொட்டப்பட்ட தார்க்கலவையின் வெப்பநிலையை சரிபார்த்தபோது
  • அது சாலை அமைக்க ஏற்ற தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
  • இதையடுத்து, மீண்டும் தார்ச்சாலை அமைக்க ஒப்பந்ததாரருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
  • தரமற்ற சாலை அமைத்து அதனை சுரண்டி எடுத்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
  • மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலம் 150 வது வார்டு, சட்டமன்ற உறுப்பினர் கணபதியின் மனைவி ஹேமாவதி வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.
  • அவரது வார்டில், தரமற்ற சாலை அமைப்பதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து பணிகளை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்