பூந்தமல்லியில் திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட வசந்தபுரி பேஸ் 2, சாய் நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால் திறந்த நிலையில் கிடக்கிறது. முழங்கால் அளவு தேங்கிய மழைநீரால் பள்ளங்கள் இருப்பதும் தெரியாது நிலை ஏற்பட்டுள்ளது. திறந்த நிலையில் உள்ள வடிகால்களை மூட எந்தவித நடவடிக்கையும் நகராட்சி அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், அந்த பகுதியில் அறிவிப்பு பலகை கூட வைக்கப்படவில்லை என கூறியுள்ளனர். அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்குள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story