சென்னையில் அதிகாலை முதலே ஆட்டத்தை ஆரம்பித்த மழை
சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சாந்தோம், பட்டினப்பாக்கம், காமராஜர் சாலை, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது