சொத்து பிரச்சனையில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. மாற்றுத்திறனாளி மகனுடன் தீக்குளிக்க முயற்சி - தலைமைச் செயலக வாயிலில் பரபரப்பு

x
  • சென்னை தலைமைச் செயலக வாயிலில், தம்பதியர் ஒருவர் தங்களது மாற்றுத்திறனாளி மகனுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
  • திருவண்ணாமலை மாவட்டம் ஈச்சங்குப்பத்தை சேர்ந்த ஏழுமலை - வெள்ளச்சி தம்பதியர், தங்கள் மாற்றுத்திறனாளி மகனான சிறுவன் வெங்கடேச பெருமாளுடன் வசித்து வருகின்றனர்.
  • கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து பிரச்சனை காரணமாக, வெங்கடேச பெருமாளின் பெரியப்பா, செல்வக்குமார் என்ற போலி மருத்துவரிடம் சிறுவனை அழைத்துச் சென்று, தவறான ஊசியை செலுத்த வைத்ததால், உடல் குறைபாட்டுடன், மனநல பிரச்னையும் ஏற்பட்டுள்ளதாக, வெள்ளச்சி தெரிவித்தார்.
  • இதுகுறித்து காவல்துறை, திருவண்ணாமலை ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
  • இந்நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் தலைமைச் செயலக வாயிலில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தம்பதியர் தீக்குளிக்க முயன்றனர்.
  • அவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி, விசாரணைக்காக வாகனத்தில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்