திருமண கனவில் இருந்த இளம்பெண் - தாயின் கள்ளக்காதலனால் நேர்ந்த கொடுமை

x

பூந்தமல்லி அருகே தகாத உறவில் இருந்த பெண்ணின் மகளிடம் அத்துமீற முயன்ற நபர் இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அம்சவல்லி. கணவரை பிரிந்த இவர், 18 வயதான தன் மகளுடன் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அம்சவல்லியின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு திருடு போன நிலையில், போலீஸார் கொலையாளியை தேடி வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில், அம்சவல்லியுடன் தகாத உறவில் இருந்த ராஜூவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றதும் உறுதியானது. பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்