கடைகளில் வசூல் வேட்டை நடத்திய போலீசார்.. உயர் அதிகாரிகளுக்கு வந்த மர்ம லெட்டர்...விசாரனையில் வெளியான பகீர் தகவல்...

x

சென்னை மாநகர காவல் துறையில் உள்ள நுண்ணறிவு பிரிவு 2ம் நிலை காவலர்கள், மாமுல் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மொட்டை கடிதாசி அனுப்பிய காவலர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தி.நகர் பகுதிகளில் உள்ள கடைகளில், லெவல் 2 நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் மணிமாறன் உட்பட பல இரண்டாம் நிலை காவலர்கள், மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை மாமூலாக வசூலித்து வருவதாகவும், வசூல் செய்த பணத்தை உயரதிகாரிகள் வரை பங்கு பிரித்து கொள்வதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பெயரிடப்படாத கடிதம் ஒன்று வந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, ஆலந்தூர் தபால் நிலையத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. பின்னர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மகேஷ் என்ற நபர் கடிதத்தை அனுப்பியது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரிக்கும் போது கே.கே நகர் காவல் நிலையத்தில் ஒன்றாம் நிலை காவலர் கந்தசாமியின் உறவினரான காவலர் மகேஷ் என்பது கண்டறியப்பட்டது. இரண்டாம் நிலை பிரிவு காவலர்கள் அமைக்கப்பட்டதில் இருந்து மாமூல் பணம் குறைந்ததால், ஆத்திரத்தில் முதல்நிலை காவலர் கந்தசாமி மொட்டை கடிதம் அனுப்பியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில், காவலர் கந்தசாமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், கந்தசாமி கடிதம் கொடுத்ததால், அதனை தபால் நிலையத்தில் போட்டதாகவும், அதில் என்ன எழுதியிருந்தது என்பது தனக்கு தெரியாது என்றும் மகேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்