குப்பையிலிருந்து பெட்ரோலிய பொருட்கள்.. சென்னை ஐஐடி-யின் அசத்தல் கண்டுபிடிப்பு
உலகத்தையே அச்சுறுத்தும் பெருநச்சாக உருவெடுத்து வருகிறது, பிளாஸ்டிக் குப்பை. சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்துக்கும் பேராபத்தாகவும் மாறியுள்ளது. இதை மட்டுப்படுத்தும் முயற்சியாக, பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து, புதிய பொருட்களைத் தயாரித்துவருகிறார்கள்.
பிளாஸ்டிக் குப்பையை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கும்போது, அது மீத்தேன், புரொப்பேன், ஈத்தேன் போன்ற வாயுப் பொருட்களாக உருமாறி, பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக உடைத்து - உயிரி எரிபொருளாக மாற்ற முடியும்.
இந்த வேதிவினையைப் பயன்படுத்தி, நெகிழிப் பொருட்களில் இருந்து பெட்ரோலியப் பொருட்களைத் தயாரிப்பது குறித்து சென்னை ஐஐடி மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
அதன் படி இனி குப்பைக் கிடங்குகளில் குப்பைகளை எரிபொருளாக மாற்றலாம் என்பதோடு குப்பைகளை எரிப்பதால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து இயற்கையை பாதுகாக்கவும் முடியும்.