அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்த தங்கை - சென்னையை அதிர வைத்த சம்பவம் | Chennai
- பெரம்பூர் சபாபதி தெருவில் வசிக்கும் முனிரத்தினம் என்பவரின் பூர்விக வீட்டின் ஒரு பகுதியை, அதே வீட்டில் மற்றொரு பகுதியில் வசித்து வரும் அவருடைய தங்கை தனலட்சுமி, அவருக்குத் தெரியாமல் எழுதி வாங்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
- இதை எதிர்த்து, முனிரத்தினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- இந்நிலையில், அதிகாலை உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், முனிரத்தினம் அலறியதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் தொடர்பாக திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, முனிரத்தினம் மீது தனலட்சுமி பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது.
- இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த முனிரத்தினம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story