மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி... தோழியை நம்பி ஏமாந்த மாணவியின் தாய் - கைவரிசை காட்டிய 'பலே லேடி'
- மேற்கு மாம்பலம் அருகே ஆற்காடு சாலையை சேர்ந்தவர் மஞ்சு. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவரின் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது.
- இதையறிந்த மஞ்சுவின் தோழியான அபர்ணா அபி, பிரபல மருத்துவ கல்லூரியில் தனக்கு தெரிந்தவர் மூலம் சீட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
- இதன் மூலம் மஞ்சுவிடம் இருந்து 5 லட்ச ரூபாய் பெற்ற அபர்ணா , கல்லூரியில் இடம் கிடைத்தாக கூறி சான்றிதழ் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
- இந்த சான்றிதழை எடுத்துக்கொண்டு அந்த மருத்துவ கல்லூரிக்கு சென்ற மஞ்சுவுக்கு, சான்றிதழ் போலியானது தெரியவந்துள்ளது.
- உடனே, இது குறித்து அபர்ணா அபியிடம் கேட்டதற்கு அவர் முறையாக பதிலளிக்காத நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான அபர்ணா அபியை தேடி வருகின்றனர்.
Next Story