மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள்..தரவுகளை வெளியிட்ட சென்னை மெட்ரோ நிறுவனம்

x
  • இதுகுறித்து அந்த நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகள் பயணித்ததாக தெரிவித்துள்ளது.
  • பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99 ஆயிரத்து 341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
  • அதிகபட்சமாக ஏப்ரல் 28-ம் தேதியன்று 2 லட்சத்து 68 ஆயிரத்து 680 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
  • இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 23 லட்சத்து 39 ஆயிரத்து 724 பயணிகளும்,
  • பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39 லட்சத்து 83 ஆயிரத்து119 பயணிகள் பயணித்தாக தெரிவித்துள்ளது.
  • டோக்கன்களை பயன்படுத்தி 3 லட்சத்து 56 ஆயிரத்து 489 பயணிகளும், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 4 ஆயிரத்து 136 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை பயன்படுத்தி ஆயிரத்து 964 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்