இந்திய அளவில் 11வது இடம் பிடித்த சென்னை மருத்துவக் கல்லூரி

x

இந்திய அளவில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும்

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை 11-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து துறை கல்வி நிறுவனங்களும் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் மத்திய அரசின் கல்வித்துறை சார்பில், தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, இந்த ஆண்டு, சென்னை மருத்துவக் கல்லூரி இந்திய அளவில் 11-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரி, தர வரிசையில் முன்னேறி வந்துள்ளது. நாடு முழுவதும் மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் சென்னை மருத்துவக் கல்லூரி உயர்ந்த நிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்