"மாவா" விற்பதில் பொறாமை, போட்டி - மாமா, அத்தையோடு மருமகனுக்கு நேந்த பயங்கரம்
சென்னை புளியந்தோப்பு பகுதியில் மாவா விற்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்த மோதலில், 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. புளியந்தோப்பு காந்தி நகரைச் சேர்ந்த அறுப்பு சங்கர் என்கின்ற சங்கர், தனது மாமனார் மோகன், மாமியார் முருகம்மாளுடன் நேற்றிரவு புளியந்தோப்பு ஆர்டிஓ அலுவலகம் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல், அரிவாளால் 3 பேரையும் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டது, இதில் காயமடைந்த மூவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட கமலக்கண்ணன் என்பவரைக் கைது செய்தனர்.
Next Story