'நம்பி வாங்க.. நான் இருக்கேன்..' வந்ததும் நகைகளுடன் ஜுட்... பெண்களிடம் ஆசை காட்டி மோசம் செய்யும் வாலிபன்

x

முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட நபரை சென்னை அண்ணா சாலை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியயை சேர்ந்த 25 வயது இஸ்லாமிய பெண் ஒருவர், சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், தனியார் முஸ்லிம் திருமண பதிவு செயலியில் திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதன் மூலம் முகமது ஃபையஸ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், தன்னை சென்னைக்கு வரவழைத்த முகமது ஃபையஸ், 50 சவரன் நகைகளை வாங்கிக் கொண்டு மாயமானதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த முகமது ஃபையஸை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர்.

அப்போது, அவரிடம் நடத்திய விசாரணையில், இது போல் பல இஸ்லாமிய பெண்களை அவர் ஏமாற்றியது தெரிய வந்தது


Next Story

மேலும் செய்திகள்