காதலித்து 'கல்தா'... கர்ப்பிணியாக்கி கழட்டிவிட்ட காதலன்..! Ex-க்கு எதிராக இளம்பெண் போராட்டம்
ஆறு ஆண்டுகள் காதலித்து கர்ப்பமாக்கிய நிலையில், வேறோரு பெண்ணை திருமணம் செய்த காதலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் உள்ள காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரில், வீட்டின் அருகே குடியிருந்த சதீஷ் என்ற நபர், தன்னை 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இருவரும் நெருக்கமாக பழகியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது, 6 மாதம் கர்ப்பம் அடைந்த நிலையில், தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணை சதீஷ் திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறும் அந்த இளம்பெண், காவல் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சதீஷை சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story