திடீரென சாலையில் கவிழ்ந்த லாரி - சென்னையில் முடங்கிய போக்குவரத்து | Chennai

x

மணப்பாக்கம் பகுதியில் சாலையில் கவிழ்ந்த லாரி,12 மணி நேரத்திற்கும் மேலாக அப்புறப்படுத்தப்படாததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மணப்பாக்கம் தர்மராஜபுரம் அருகே பிரதான சாலையில், ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி, சகதியில் சிக்கி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் காலை முதலே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் 12 மணி நேரமாகியும் லாரி அப்புறப்படுத்தப்படாததால், மணப்பாக்கம்- கொளப்பாக்கம் இடையேயான போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. முகலிவாக்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியிருப்பதால், கிண்டி மார்க்கத்தில் இருந்து முகலிவாக்கம் வழியாக கொளப்பாக்கம் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்