சென்னை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - கைதான 2 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்த போலீஸ்

x

சென்னை நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் கைதான 2 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்த தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றனர்.

சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலீசாரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்ற நிலையில் அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. இதன்பேரில் 2 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்த போலீசார், பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையர்கள் கொடுத்த தகவலின் பேரில் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கங்காதரன் மகாலட்சுமி லே அவுட் பகுதியில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசாக பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தொடர்புடைய அருண் மற்றும் கவுதம் ஆகிய 2 பேரை பிடிக்க கர்நாடகா, ஆந்திராவில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்