மருமகன் செய்த காரியம்... மாமியாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சேலையூர் பகுதியை சேர்ந்த ஜான்ஸி ராணி மற்றும் லூயிஸ் இருவருக்கும் திருமணம் நடைபெற்று, 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் லூயிஸுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஜான்ஸி ராணி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில், ஜான்ஸி ராணியை சமாதானப்படுத்தி வீட்டிற்க்கு அழைத்து வந்த லூயிஸ், மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் மனைவிக்கு மொட்டை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த ஜான்சி ராணியின் தாய் மரியா, மகளை பார்க்க வேண்டும் என மருமகனிடம் கூறியுள்ளார். அதற்கு ஜான்ஸி ராணி வீட்டில் இல்லை என லூயிஸ் கூறவே, அதிர்ச்சியடைந்த மரியா, மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், லூயிஸிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.