WhatsApp-ல் மனைவிக்கு சொல்லிவிட்டு தூக்கில் தொங்கிய கணவன் - சென்னையை உலுக்கிய சம்பவம்
சென்னை அயனாவரத்தில் உள்ள விடுதியில், மனைவிக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பின்னர் மனைவியுடன் வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கணேசனுக்கு காசநோய் இருப்பது தெரியவந்தது. இதனிடையே, திடீரென அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள விடுதிக்கு சென்று, அறை எடுத்து தங்கியிருந்த கணேசன், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது மனைவிக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, அந்த விடுதிக்கு விரைந்துள்ளார். ஆனால், அதற்குள் கணேசன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.