உடலுறவுக்கு வர மறுத்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- உறவுக்கு மறுத்த மனைவியைக் கொன்ற கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- சென்னை அண்ணாநகர் மேற்கு புதுகாலனியைச் சேர்ந்த சீனிவாசன் அம்மு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்...
- அம்முவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
- இதை சீனிவாசன் கண்டித்த போதிலும் அம்மு கேட்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு சீனிவாசன் உறவுக்கு அழைத்த போது அம்மு வர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது...
- மேலும், தனக்கு பழக்கம் உள்ள அந்த உறவினருடன் மட்டும் தான் உறவு வைத்துக் கொள்ள முடியும் என அம்மு கூறியதாக தெரிகிறது.
- இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் அம்முவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
- இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சீனிவாசனுக்கு 10 ஆண்டு கால சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story