சாலை விரிவாக்க பணியால் பறிபோன உயிர்.. சென்னையின் முக்கிய சாலையில் கோர விபத்து

x
  • சென்னை, கொளத்தூரைச் சேர்ந்தவர் மேகநாதன்
  • . இவர் பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் ஒரு பகுதி தோண்டப்பட்டிருந்தது தெரியாமல் வாகனத்தில் சென்ற நிலையில் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
  • அப்போது, அருகில் வந்த லாரி அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • போலீசார் அவரது சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
  • இந்நிலையில், சாலை விரிவாக்க பணியின் போது ஒப்பந்ததாரர்கள் போதிய தடுப்புகள் அமைக்காததால் விபத்து ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
  • மேலும், இதே பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்