வருமானத்திற்கு அதிகமாக 201% சொத்து சேர்ப்பு... சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை
சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில், 2009ம் ஆண்டு சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, பயணிகளிடம் லஞ்சம் பெற்றதாக சுங்கத் துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த பல்லப் சின்ஹா மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 2008 முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், பல்லப் சின்ஹா, அவரது மனைவி ரீனா சின்ஹா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ரீனா சின்ஹா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பல்லப் சின்ஹா மீதான வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி மெகபூப் அலிகான், பதவி காலத்தில் 10 லட்சத்து 59 ஆயிரத்து 56 ரூபாய், அதாவது 201 புள்ளி 38 சதவீதம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.