"குற்ற உணர்ச்சி இன்றி கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு" -சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பழமையான கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபம் நிர்வாகம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து நீதிபதி அளித்த தீர்ப்பில், மக்கள் ஒரு காலத்தில் தங்களது சொத்துகளை கோயிலுக்கு தானமாக அளிக்கும் பழக்கம் இருந்ததாகவும், கோயில் சொத்துகளை அபகரிப்பது அல்லது சுரண்டுவது மக்களுக்கு பயத்தை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாதல் காரணமாக அந்த பயம் தற்போது அற்றுப்போய் விட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
Next Story