மெரினா கடற்கரை-காவல்துறை கெடுபிடி..சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி
- கோடை வெயிலுக்கு மெரினா கடற்கரை வரும் மக்களை நேர கட்டுப்பாட்டை காரணம் காட்டி காவலர்கள் துன்புறுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு என்ன ஆதாரம் உள்ளது என மனுதாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- கோடை வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டி உக்கிரம் காட்டும் நிலையில், வெப்பத்தைத் தணிக்க மெரினா கடற்கரையில் கூடும் மக்களை,இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்க கூடாது எனக் கூறி காவல் துறையினர் அப்புறப்படுத்துவதாகவும்,
- ஓட்டல்கள் 24 மணி நேரம் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாறவும் அனுமதித்துள்ள அரசு
- வெப்பம் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.
- இதையடுத்து, கடற்கரைக்கு வரும் மக்களை இரவு 10 மணிக்கு மேல் அனுமதிக்கவும், அவர்களை துன்புறுத்த கூடாது என்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
- இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மெரினா செல்பவர்களை காவல் துறையினர் எப்படி துன்புறுத்துகின்றனர்? என்ன ஆதாரம் உள்ளது? எனக் கேள்வி எழுப்பி, விசாரணையை ஜூன் மாதத்திற்குத் தள்ளி வைத்துள்ளனர்.
Next Story