எஸ்.ஐ-யை தாக்கி தப்பியோடிய ரவுடியை சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ - நள்ளிரவில் சென்னையில் த்ரில் சம்பவம்
- சென்னையில் தப்பியோடிய பிரபல ரவுடி மீது, நேற்று நள்ளிரவில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- சென்னையில், கடந்த 20-ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில், அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
- இந்த சம்பவம் தொடர்பாக, கௌதம் மற்றும் அஜித் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
- இந்நிலையில், திருவள்ளூரில் பதுங்கி இருந்த பெண்டு சூர்யாவை கைது செய்த தனிப்படை போலீசார், அவரை அயனாவரம் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு அழைத்து வந்தனர். அப்போது, ரவுடி சூர்யா, போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது.
- இதையடுத்து, ரவுடி சூர்யாவை உதவி ஆய்வாளர் மீனா துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.
- சூர்யாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Next Story