கானா பாடல்களில் யாருக்கு மரியாதை என்பதில் தகராறு...இறந்த நண்பனின் காரிய நிகழ்ச்சியில் நடந்த கொலை

x

சென்னை சைதாப்பேட்டை நெருப்பு மேடு பகுதியை சேர்ந்தவர் உமர் பாஷா. இவரது நண்பர் சந்தோஷ் இறந்ததை யொட்டி அதற்கான காரிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக நடந்த கானா நிகழ்ச்சியின் போது, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரை முன் நிறுத்தி, மரியாதை செலுத்தும் வகையில், கானா பாடல்கள் பாடியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், அருண், தினேஷ் தரப்புக்கும், உமர்பாஷா தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ் தரப்பினர், மறைத்து வைத்திருந்த கத்தியால், உமர்பாஷாவின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தினேஷ், அருண், சக்திவேல் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்