வெள்ள பாதிப்பு பகுதிகள் சென்னையில் இவ்வளவா.. - தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

x
  • தமிழகத்தில் 3 ஆயிரத்து 916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள மாநில பேரிடர் மேலாண்மைத் திட்ட அறிக்கையில், 719 இடங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும், ஆயிரத்து 86 இடங்கள் மிதமான பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன் படி அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் 3 அடி முதல் 5 அடி வரையிலும், மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி வரையிலும், குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகள் 2 அடிக்கும் குறைவான வெள்ள நீர் தேங்கிய பகுதிகள் ஆகும்.
  • 317 இடங்களில் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த இடங்களில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது.
  • இதில் அதிக பட்சமாக செங்கல்பட்டில் 389 இடங்களும், சென்னையில் 332 இடங்களும், கடலூரில் 293 இடங்களும், நீலகிரியில் 284 இடங்களும், மயிலாடுதுறையில் 228 இடங்களும் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்