3 நாட்களாக திறக்கப்படாத விடுதி அறை கதவு... கட்டிலில் மனைவி, கழிவறையில் மகள் - சென்னை குடும்பத்தினருக்கு கேரளாவில் அரங்கேறிய சோகம்

x

சென்னை துரைபாக்கத்தை சேர்ந்த பீட்டர், அவரது மனைவி மற்றும் மகளுடன் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளனர். 3 நாட்கள் தங்கி இருப்பதாக தெரிவித்த அவர்கள், அறையில் இருந்து வெளியே வராததால் விடுதியின் ஊழியர்கள் சந்தேகமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது மூன்று பேரும் சடலங்களாக கிடந்தனர். இதில், பீட்டர் மின் விசிறியில் தூக்கிட்டவாறு கிடந்தார், மனைவி சுனி கட்டிலில் சடலமாகவும், மகள் ஐரின் கழிவறையில் சடலமாகவும் கிடந்துள்ளனர். மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு பீட்டர் தற்கொலை செய்து கொண்டாரா? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்