30 வருடம் ஊரை ஏமாற்றி வந்த போலி டாக்டர் - தகவலறிந்து சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை எண்ணூரில் 30 வருடங்களாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதவரத்தைச் சேர்ந்த சுதர்சன் குமார், எண்ணூர் நேதாஜி நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கி கிளினிக் நடத்தி வந்தார்.
அவர், போலி மருத்துவர் என மருத்துவ கவுன்சில் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து மருத்துவ கவுன்சில் அதிகாரிகள், சுதர்சன் குமாரின் கிளினிக்கில் சோதனை நடத்தி, விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சுதர்சன் குமார் போலி மருத்துவர் என்பது உறுதியானது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதர்சன் குமாரிடமிருந்து மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவையும், ஒன்றரை லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Next Story