அரசு மருத்துவமனையில் நோயாளியை கொண்டு செல்லும் நாற்காலியில் குப்பைகள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி குப்பை கொட்ட பயன்படுத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வரும் நிலையில், பணியாளர்கள் குறைவாக இருப்பதால் மருந்து மாத்திரைகள் தாமதமாக கிடைப்பதாக நோயாளிகள் குற்றம் சாட்டி வந்தனர்... இது ஒரு புறம் இருக்க மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் கொட்டப்படுகிறது... நோயாளிகளை அமர வைத்து அழைத்து செல்லப் பயன்படுத்தப்படும் சக்கர நாற்காலியில் குப்பைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன... இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது குப்பை கொண்டு செல்லும் சக்கர‌ நாற்காலியை நோயாளிகளுக்கு பயன்படுத்துவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்