திடீரென பற்றி எரிந்த கார் - பதறியடித்து ஓடிய உரிமையாளர் - கருகி எலும்புக்கூடான கார் | chennai
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் விக்னேஷ்வரன், காரப்பாக்கம் பகுதியில் தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, காரின் முன்பகுதியில் புகை வந்ததால், உடனே அவர் காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். பின்னர், கார் தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
Next Story