சென்னை பையனுக்கு கேரள பொண்ணுடன் மலர்ந்த காதல்.. பிரிக்க நினைத்த பெற்றோர்.. சேர்த்து வைத்த Whatsapp..!
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த காமேஸ்வரன் என்பவருக்கும், கேரளாவை சேர்ந்த சுஜிதா என்பவருக்கும் ஆன்லைன் மூலம் பட்டய படிப்பு படிக்கும் போது காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கேரளாவில் இருந்து சென்னை வந்த சுஜிதாவை காமேஸ்வரன் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, மகளை காணவில்லை என கூறி சுஜிதாவின் பெற்றோர் திருச்சூர் போலீசில் புகாரளித்துள்ளனர். அவர்கள் சுஜிதாவின் செல்போன் சிக்னலை வைத்து தேடி வருவதை அறிந்த காதலர்கள் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதனை தொடர்ந்து, பென்ணை அழைத்து செல்ல கேரளா போலீசார் திருவொற்றியூர் வந்த நிலையில், சுஜிதா காதலனை விட்டு செல்ல மறுத்திருக்கிறார். இதையடுத்து, அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் வாட்ஸ் ஆப் கால் மூலம் நீதபதியிடம் சம்பவத்தை எடுத்து கூறியதாக கூறப்படுகிறது. அப்போது, நீதிபதி இருவரும் மேஜர் என்பதால் திருமணம் செல்லுபடி ஆகும் என தெரிவித்த நிலையில், காதலனுடனே பெண்ணை போலீசார் அனுப்பி வைத்தனர்.