ஏடிஎம் மீது கல்லை தூக்கிப் போட்டு திருட முயன்ற முகமூடி கொள்ளையன்..! அலாரம் அடித்ததால் ஓட்டம்.. சென்னையில் பரபரப்பு
- சென்னை, கே.கே. நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து, பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அதிகாலை சுமார் மூன்று மணியளவில், முகமூடி அணிந்த நபர் ஒருவர், ஏடிஎம் இயந்திரம் மீது கல்லை தூக்கிப் போட்டு உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.
- அப்போது, ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் அடித்ததை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
- சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்து வருவதற்குள், கொள்ளையடிக்க முயன்ற நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
- இதையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story