"மத்தவங்களுக்கு 2,500, எங்களுக்கு 9000" " - 3 நாளா தண்ணீர் விடாம அட்டூழியம்" கொந்தளித்த குடியிருப்புவாசிகள்-போராட்டத்தில் குதித்த ஷகிலா
சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் கட்டவில்லை என்று கூறி 40 வீடுகளுக்கு
கடந்த 3 நாட்களாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக நடிகை சகிலா நேரில் குரல் கொடுத்தார். மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் பராமரிப்பு கட்டணம் செலுத்தி வந்த நிலையில் சில வீடுகளுக்கு மாதாந்திர பராமரிப்பு கட்டணம் தற்போது 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர். குடியிருப்பு சங்க நிர்வாகிகள்
3 பேர் சர்வாதிகாரமாக செயல்படுவதாகவும், வசூலிக்கும் பணத்திற்கு முறையாக வரவு செலவு கணக்கை சொல்வதில்லை என்றும் அக்குடியிருப்பில் வசிப்பவர்கள் சரமாரி குற்றம்சாட்டினர்.
Next Story