வெளிநாட்டு calls-ஐ உள்ளூர் Calls-ஆக மாற்றி.. ஏர்டெல்லுக்கே ஆட்டம் காட்டிய பாய்ஸ் - இன்ஸ்டாவில் கற்று கொடுத்த வித்தை
- ஏர்டெல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏர்டெல் அலுவலகத்தின் நோடல் அலுவலர், பல்லாவரம் பகுதியில் ஏர்டெல் நிறுவனத்தின் தொலை தொடர்பை சட்ட விரோதமாக பயன்படுத்தி, வருவாய் இழப்பு ஏற்படுத்தப்படுவதாக புகாரளித்தார்.
- இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியும், போலியாக சிம்கார்டு ஆக்டிவேட் செய்தும் ஏர்டெல் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய பாஹத் முகமது மற்றும் சாஹல் ஆகியோரை கைது செய்தனர்.
- அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான முகம் தெரியாத நபர், இந்த மோசடியில் ஈடுபட்ட கற்று தந்ததும், மாதம் 15 ஆயிரம் ரூபாயும், பிற வசதிகளும் செய்து தருவதாக அந்த நபர் கூறியதன் பேரில் இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
Next Story