அதிமுக பகுதி செயலாளரை கொடூரமாக வெட்டி கொன்ற மர்ம கும்பல் - சென்னையில் நடந்த பயங்கர சம்பவம்

x
  • சென்னை வியாசர்பாடியில் அதிமுக பகுதி செயலாளரை, மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • சென்னை,வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்த்தவர் இளங்கோவன். அதிமுகவில் பெரம்பூர் பகுதி செயலாளராக உள்ளார்.
  • நேற்று இரவு 10 மணியளவில் வியாசர்பாடி முத்து மாரியம்மன் கோயில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தபோது, ஐந்துக்கும் மேற்பட்டோர் வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.
  • இதில் தலையில் படுகாயமடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • கொலைக்கு, தொழில் போட்டி காரணமா? அல்லது அரசியல் முன்பகையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்