உலக அதிசயமே அசந்துபோகும் அதிசயம்.. ஈபிள் டவரை விஞ்சும் 'இந்திய செனாப்' - உலகின் கண்கள் காஷ்மீர் பக்கம்

x
  • மலை முகடுகளுக்கு நடுவே... தவிழ்ந்து செல்லும் மேகங்களையும் தாண்டி... வானவில்லை போல் வளைந்து... நம்மை ஆச்சரியத்தில் வாயை பிளக்க வைத்துள்ள அதிசயம் தான் இது! அதுவும் இது ரயில் பயணம் விரும்பும் சாகச பிரியர்களுக்கு ஏற்ற சாய்ஸூம் கூட!
  • கீழே ஓடுவதோ ஜம்மு-காஷ்மீரின் செனாப் ஆறு... ஆற்றின் மேலே கரடுமுரடான மலை பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் அதிகபட்ச உயரமோ கடல் மட்டத்தில் இருந்து 359 மீட்டராக உள்ளது. உலக அதிசயங்களுள் ஒன்றான ஈஃபில் டவரின் உயரம் கூட 324 மீட்டர் தான். இதனால் தான் உலகிலேயே மிக உயரமான கட்டுமானமாக காட்சியளித்து... இன்று பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது, இந்த பிரமாண்டம்.
  • பலத்த புயல் காற்று... மோசமான வானிலை என பல சவால்களை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் ஆயிரத்து 315 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், 266 கிலோ மீட்டர் வேகத்தை தாங்கக்கூடியது. பாலத்தின் ஆயுட்காலமோ சுமார் 120 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 18 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமான இந்த பால பணிகளில் இன்று 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. விரைவில் இந்த பாலத்தில் ரயில்வே போக்குவரத்தும் தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக காஷ்மீரின் ஸ்ரீநகர்... நாட்டின் இதர பகுதிகளுடன் இணையவுள்ளது.
  • தற்போது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் சீனாவின் குய்சோ மாகாணத்தில் பெபன்ஜி யாங் ஆற்றின் மீது 275 மீட்டர் உயரத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. செனாப் பாலம் பயன்பாட்டிற்கு வரும் போது அது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெருமையை பெற்றுவிடும்.
  • மொத்தத்தில் இந்திய ரயில்வேயின் இந்த முயற்சி மிக நுட்பமான பொறியியல் திறனுக்கு சாட்சியாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

Next Story

மேலும் செய்திகள்