அதிகாரிகளின் அதிரடி ரெய்டால் சிக்கிய ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் - அதிர்ந்து போன வாடிக்கையாளர்கள்

x

மதுரை மாட்டுத்தாவணி பழச்சந்தையில், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 140 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 45 கிலோ திராட்சை பழம், 60 கிலோ தண்ணீர் பழம் மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 18 வாழைத்தார், வாழைப்பழங்கள் உட்பட 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை விற்பனை செய்த கடைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்