"முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்"... 2- ஆம் கட்டமாக விரிவாக்கம்

x

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள 6 நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி தலைமையில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் விரிவுபடுத்தி துவக்கி வைத்து மாணவ மாணவிகளோடு இணைந்து உணவு அருந்தினார்...

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆட்சியர் ரமண சரஸ்வதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு காலை உணவை பறிமாறி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் ஆட்சியர் கற்பகம், முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடு குறித்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அருணாரை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்...

அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அதே உணவை குழந்தைகளோடு ஒன்றாக அமர்ந்து அருந்தினார்...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் துவக்கி மாணவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தார்


Next Story

மேலும் செய்திகள்