காதலிக்கு வேறொருவருடன் திருமணம்... வெடிகுண்டு ஹோம் தியேட்டரை பரிசளித்த காதலன் - வெடித்து சிதறிய காதலியின் கணவர், தம்பி

x

காதலிக்கு வேறொருவருடன் திருமணம்... வெடிகுண்டு ஹோம் தியேட்டரை பரிசளித்த காதலன் - வெடித்து சிதறிய காதலியின் கணவர், தம்பி

சத்தீஸ்கரில் உள்ள கவர்தாவில் தன்னை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட காதலிக்கு அவரது முன்னாள் காதலன் வெடிகுண்டு ஹோம் தியேட்டரை திருமண பரிசாக கொடுத்துள்ளார். இதனை அறியாமல் பரிசுப்பொருளை பிரித்து பார்த்த போது, வெடி வெடித்ததில் காதலியின் கணவர் மற்றும் அவரது தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மேலும் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, 32 வயதான சர்ஜு என்ற அந்த பெண்ணின் முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்