'கூகுள் சாம்ராஜ்யத்திற்கு முடிவு...? 'இணைய உலகில் ஏற்படப்போகும் பெரும் புரட்சி ChatGPT-யில் இவ்வளவு வசதியா!

x

பழையன கழிதலும் புதியன புகுதலும்... தகவல் தொழில்நுட்ப உலகில் ஒரு தினசரி நிகழ்வு... அப்படி புதிய வரவாக களமிறங்கியிருப்பதுதான் ChatGPT... உலகம் முழுவதும் இதைப்பற்றிதான் பேச்சும்...

ஆம், இதுதான் இணைய உலகில் கூகுளின் கில்லராக, அதாவது கூகுள் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டுவர உள்ளது என்றெல்லாம் பேசப்படுகிறது.

அப்படியொரு அம்சமாயா...? என ஆச்சர்யமாக கேட்டால் தான் யார் என்ற கேள்விக்கு பதிலையும் கொடுக்கிறது ChatGPT தளம்.

(ChatGPT, OpenAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AIமொழியாக்கம்... இது கொடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் மனிதனைப் போன்ற உரையை உருவாக்கும் திறன் கொண்டது.)

அப்படியா...? என்று கேட்டு ஏதாவது கேள்வியை எழுப்பினால் அதற்கு கேட்டப்படி பதிலையும் கொடுக்கிறது. எரிபொருள் விலைவாசி உயர்வு, பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம், இது தொடர்பாக கட்டுரை ஒன்று எழுத வேண்டுமே...? என டைப் செய்தால் போதும் சில நொடிகளில் உங்களுக்கான கட்டுரையை தயார் செய்து தந்துவிடும்....

கூகுள் தேடல் பொறியில் ஒன்றை தேடி, தகவல்களை திரட்டி, கோர்த்து ஒரு உரையை நாம் தயாரிக்க வேண்டும். ஆனால் அந்த பணிகளை எல்லாம் ஒரே கேள்வியில் முடிக்கிறது ChatGPT..

மனிதன் சிந்தித்து செயல்படுவது போல், கணினி கோடிங்கை எழுதி, தரவுகளை உள்ளீடு செய்து, அதன் வாயிலாக ஒரு இயந்திரத்தை சிந்தித்து செயல்பட வைப்பது செயற்கை நுண்ணறிவாகும்.

அந்த வகையில் உருவாக்கப்பட்ட ChatGPT தேடலில் காட்டும் வேகம் கூகுள் தேடுபொறியே காணாமல் போகும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்ற கூற்றும் தகவல் தொழில்நுட்ப உலகில் நிலவுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த சாம் ஆல்ட்மேனால் என்பவரது OpenAI (ஓபன் ஏஐ) நிறுவனம் உருவாக்கிய ChatGPT செயலியை கூகுள், ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்து பயன்பெறலாம்..

இப்படி செயலில் வெளியான ஓரிரு மாதங்களிலே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த செயலியை தரவிறக்கம் செய்திருப்பது இணைய உலகில் செல்வாக்கை காட்டுகிறது.

வரும் காலங்களில் பல மொழிகளிலும் தனது சேவையை வழங்கவிருக்கிறது ChatGPT...இதற்கு மத்தியில் ChatGPT ஆல் பாதிப்பு இருக்கிறதா என்றால்... ஆம் என்ற பதிலையும், தவறான உள்ளீட்டின் விளைவாக இருக்கலாம் என சொல்கிறது.

இதுபோக கொலை முதல் போதைப்பொருள் கடத்தல் வரையிலான குற்ற செயல்களுக்கும் விளக்கம் அளிப்பது ஆபத்தாக முடியும் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

நடப்பு விவகாரம் குறித்து கேள்விகளை கேட்டால் ChatGPT-யிடம் பதில் இல்லை..

ஆம் 2021 வரையிலான தரவுகள் மட்டுமே ChatGPT-க்கு உள்ளீடு கொடுக்கப்பட்டுள்ளது. என்னதான் விரைந்து உரைகளை வழங்கினாலும், அதில் தவறுகளும் உள்ளன.

இது வரும் காலங்களில் சரி செய்யப்படும் என நம்பப்படும் நிலையில், ChatGPT முழுதாக நடைமுறைக்கு வரும்போது இணைய உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றே சொல்லப்படுகிறது.

மறுபுறம் தேடுபொறியில் தனது மார்க்கெட்டை கூகுளிடம் பறிகொடுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் ChatGPT-யை தனது பிங் தேடுதளத்தில் இணைத்துள்ளது.

இந்த போட்டியை சமாளிக்க கோதாவில் இறங்கியிருக்கும் கூகுள் நிறுவனம், Bard chatbot தளத்தை அறிமுகம் செய்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்