பிரிட்டனின் புதிய மன்னராகிறார் சார்லஸ் - இன்று பொறுப்பேற்பு
இங்கிலாந்தின் மன்னராக சார்லசை இன்று பிரகடனப்படுத்த உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. பிரகடனம் என்பது புதிய மன்னர் பதவியேற்பதற்கான பொது அறிவிப்பாகும். புதிய மன்னரை அங்கீகரிப்பதற்காக, முதன்மை பிரகடனத்தின் நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை கொடிகள் முழுக் கம்பத்தில் பறக்கவிடப்படும், அதன் பிறகு கொடிகள் அரைக்கம்பத்திற்குத் திரும்பும். அந்தரங்க சபை பிரகடனங்களை தொடர்ந்து பொது பிரகடனம் வாசிக்கப்படும். செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பலகணியில் இருந்து 11.00 மணிக்கு முதல் பொது பிரகடனம் வாசிக்கப்படும். பிரகடனத்தை ஏர்ல் மார்ஷல், மற்ற ஆயுத அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் ஆகியோருடன் கார்டர் கிங் ஆஃப் ஆர்ம்ஸ் வாசிப்பார். முதல் பிரகடனத்தைத் தொடர்ந்து, இரண்டாவது பிரகடனம்- லண்டன் நகரில் ராயல் எக்ஸ்சேஞ்சில் முதல் பிரகடனத்தின் அதே நாளில் மதியம் படிக்கப்படும். மேலும் பிரகடனங்கள் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸில் செப்டம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் வாசிக்கப்படும்