நாளை விண்ணில் பாயும் சந்திரயான்-3 - இன்று தொடங்குகிறது கவுன்ட்டவுன்
நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா சார்பாக, சந்திரயான்-3 விண்கலம் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி 35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் அதற்கான 25 மணி 30 நிமிட நேர கவுன்ட்டவுன் இன்று பிற்பகல் 1 மணிக்கு துவங்குவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதற்காக எரிபொருள் நிரப்பப்பட்டு கிரயோஜனிக் இன்ஜினில் லேண்டெர் மற்றும் விக்ரம் ஆகியவை பொருத்தப்பட்டு ராக்கெட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
Next Story