தமிழகத்திற்கு ரூ.5,769 கோடி விடுவித்த‌து மத்திய அரசு

x
  • ஜி.எஸ்.டி. வரி பகிர்வாக, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 318 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • 14ஆவது தவணையாக விடுவிக்கப்பட்டுள்ள இந்த தொகையில், தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 769 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சி செலவினங்களை வேகப்படுத்தி, மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதியின் அடிப்படையில் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வழக்கமாக மாதாந்திர தவணையாக 70 ஆயிரத்து 159 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், இந்த முறை இரண்டு மடங்காக மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்